காலம் எழுதிய வரிகள் – கவிதை தொகுப்பு.

ஆசிரியர்:

அ. யேசுராசா (தொகுப்பு), மின்னூலாக்கம்.

இ. பத்மநாப ஐயர், மின்பதிப்பு, ஈழநூல்.

உள்ளே...

பதிப்புரை

* காசி ஆனந்தன்

ஆடடா களத்தே....

நாம் மறப்பதில்லை!

*முருகையன்

தற்கொடை

*தா.இராமலிங்கம்

உங்களுக்குக் கேட்கவில்லையா?

*சோ.பத்மநாதன்

பாலாய் நிலவு பொழிகிறது!

உன்னி உன்னி.

*புதுவை இரத்தினதுரை

பள்ளிக்குப் போன பிள்ளை ஏன் வரவில்லை

கூற்றுவனைத் தூக்கிலிடு

*அல்லை க.வ.ஆறுமுகம்

இந்தப் 'பளு'வை உணர்ந்தீரா?

* பஞ்சாட்சரம்

வாருங்கள் ! மாந்துங்கள்! வாழ்த்துங்கள்!

* ப.அறிவுடைநம்பி

கொடி பறக்குது கோட்டையில்!

* வீ.பரந்தாமன்

அறத்தின் ஒருவடிவோ?

*மு.வே.யோ.வாஞ்சிநாதன்

தாய்த்தமிழின் மண்!

*கல்வயல் வே.குமாரசாமி

பெறுமானம் அல்லது நம்மைப்பற்றிய சுய விமர்சனம்

*நாவண்ணன்

இவனா என் பிள்ளை!

*சாருமதி

இருவர் பாடல்

*நவாலியூர் நடேசன்

அஞ்சலி!

*எஸ்.ஜி.கணேசவேல்

இப்படியும் மரணவீடுகள்

*சு.வி

சூரிய நமஸ்காரம்

*இ.ஜெயராஜ்

தாகம் தீர்ப்பாள் நாகபூஷணி!

*வளவை வளவன்

புதுக்கீதை பிறக்குது ஈழத்திலே!

*நிலா தமிழின்தாசன்

வான் முகிலே! அழுவது ஏன்?

*கோப்பாய் சிவம்

விடைகொடு!

*ஜெ.கி.ஜெயžலன்

கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல்

*கி.பி. அரவிந்தன்

இனி

* சி.கருணாகரன்

தேசத்தின் விருட்சம்

* வவுனியா திலீபன்

இனியும் துயிலோம்

* சத்தியவசனம்

நத்தார் விசனம்

* மைதிலி அருளையா

ஒவ்வொரு காலையிலும்.....

* த.றெஜ“ந்திரகுமார்

நானுங்கூட.....

* கே. பாபு

தளிர்

* நாக.சிவசிதம்பரம்

நிழல் போதும் என்றால்.....

* தெல்லியூர் ஜெயபாரதி

உன் மரணம் மனதில் எழுதிய கவிதை

* எஸ்.உமாஜிப்ரான்

கீழ்த்திரையின் முகம் நோக்கி.....

* மீரா

விழ விழ எழுவோம்!

* வினோதினி

எங்கே போனீர்கள்?

* நிதர்சன்

ஒரு நெய்தல்

* இ.சிவாந்தினி

சந்தோசம் அதிகம்

* நாமகன்

அழைப்பு

* பாண்டியன்

உடன் வரவும்!

* செ.மகேந்திரன்

பகை தொலைத்து நீதி காப்போம்!

* இயல்வாணன்

இடைவெளிகள்

* கப்டன் கஸ்தூரி

இறப்பற்றோர்!

* மேஜர் பாரதி

என் தேசமே!

* நாமகள்

விடியல்வரை தொடருமா.....?

* கௌதமி

அன்னை நிலம்

* இராஜி சண்முகநாதன்

நல்லதொரு விடுதலை நாமினிக் காண்போம்!

* கி.சிவஞானம்

உயிர்ப் பொருள்

* முருகு இரத்தினம்

உனக்கேன் அச்சம்!

* ஆதிலட்சுமி இராசையா

அம்மா நீயும் அழுவதை நிறுத்து!

* மா.மயிலன்

ஒத்திகை

* தூயவள்

எப்படிச் சாத்தியமானது......?

பதிப்புரை

தேசிய இன இடுக்குமுறை- விடுதலைப் போராட்டம் சார்ந்த வாழ்வனுபவங்களை வெளிப்படுத்தும் வெவ்வேறு கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலுருவில் வெளியிடுதல், காலப்பொருத்தமான பணியெனக் கருதினோம்.

ஏற்கெனவே இவ்வாறான தொகுப்பு நூல்கள் சில 1985 இன் இறுதிப்பகுதிவரை வெளிவந்துள்ளபோதிலும், அதன் பின்னர் அத்தகைய முயற்சியேதும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, 1986 தைமாதத்தைத் தொடக்கமாகக் கொண்டு, 1993 ஆவணிவரை எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்பட்ட / பிரசுரிக்கப்படாத கவிதைகளைத் தொகுக்கத் தொடங்கினோம். பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமும், நேரிலும் எமது தேடலிலும் பெற்றவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் இரண்டு தொகதிகளாக வெளியிடப்படும். காலம் எழுதிய வரிகள் என்ற பெயரிலான அதன் முதற்றொகுதியை இப்போது கைகளில் தந்துள்ளோம்.

தமிழீழத்தின் மூத்த கவிஞர்களான காசி ஆனந்தன், முருகையனிலிருந்து தெல்லியூர் ஜெயபாரதி ஆகிய இளங் கவிஞர்வரையிலான 51 கவிஞர்களின் கவிதைகள், இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன; 13 பெண்கவிஞர்கள்- 19 இளங்கவிஞர்கள் - 3 மாவீரர்கள் இதில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் - சமூக மெய்ம்மைக்கும் கவிதா நேர்த்திக்கும் தெரிவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளபோதும், தேவை கருதி சில இடங்களில் நெகிழ்ச்சிப் போக்கையும் கடைப்பிடித்துள்ளோம்.

சமூகப் பொறுப்போடு தமது கவிதைகளைத் தந்து ஒத்துழைத்த அனைத்துக் கவிஞர்களக்கும் எமது முதல் நன்றி.

அத்துடன், கவிதைகளை தேர்வுசெய்து தொகுத்தும் பணியைச்செய்த அ.யேசுராசா அவர்களுக்கும் தமிழ்த்தாய் வெளியீட்டகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

பத்திரிக்கைத் தொகுதிகளைப் படித்துப்பார்க்க வசதிசெய்து தந்த யாழ். பல்கலைக்கழக நூலகர், 'ஈழநாதம்' நிர்வாகப் பணிப்பாளர்; கவிதைகளைத் தெளிவான கையெழுத்தில் பிரதிசெய்து உதவிய இளந்திரையன், முன்புற அட்டையை வடிவமைத்த ஒலிவர் ஆகியோருக்கம் எமது நன்றிகள்.

தமிழ்த்தாய் வெளியீட்டகம்.

ஆடடா களத்தே......

காசி ஆனந்தன்

பத்துத் தடவை பாடை வராது

பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா

செத்து மடிதல் ஒரேஒரு முறைதான்

சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா!

முத்தமிழோடு மோதினார் பகைவர்

முடங்கிக் கிடப்ப தென்ன நீதி

குத்தும் கணைகள் குண்டுகள் வரட்டு ம

குருதி பெய்யடா! கொட்டும் முரசே!!

ஆற்றல் அடையாய்! ஆண்மைத் தமிழனே

அடநீ என்னடா அடங்கி நின்றனை

சோற்றுப் பானையும் நாமும் ஒன்றோ?

சும்மா வயிறு நிரப்பவோ வந்தோம்?

மாற்று வீரன் மருளத் தமிழன்

மானப்போர் செய்திட மாட்டானோ?

நாற்றிசையும் நடுங்க எழடா!

நடந்துபோ செங்குருதி நடுவிலே!

அன்னைத் தமிழோ அழுது கிடந்தார்!

அருந்தமிழ் நாடோ அழுந்திக் கிடந்தது

முன்னைச் சேர சோழ பாண்டியர்

மூச்சு முடிந்து போச்சோ தமிழா?

உன்னைத் தமிழனாகப் பெற்றாள்

ஊட்டி வளர்த்த முலைப்பால் எங்கடா?

தென்னைக் குலைகள் என்னப் பகைவர்

சென்னி திருகடா! செருவில் எழுகவே!

விடுதலை என்ன மலிவு விலையோ?

வீதிக்கடையில் விற்பனைக் குண்டோ?

புடலங்காயோ விடுதலை? போடா!

போர்க்களம் ஆடப்போ! அதுகிடைக்கும்!

கொடுவிலையாகக் குருதியும் ஆவியும்

கொடடா உன்தலை ! கொள்க விடுதலை!

அடநாம் மானத் தமிழர் அல்லவோ!

ஆளப் பிறந்தோம்......ஆடடா களத்தே...!.

ஈழநாதம்

20.7.1990

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு (HTML வடிவம்)

0 comments: