யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

150px-1019

நூல் விபரம்

ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நூல்தேட்டம் பற்றிய அறிமுக நூல். நூல்தேட்டத் தொகுப்புமுறை பற்றிய தகவல்களுடன், அதன் தொகுப்பாளர் திரு. என். செல்வராஜா பற்றிய பின்னணித் தகவல்களையும், நூல்தேட்டத்தின் பகுப்பு முறை பற்றியும் இந்நூல் விரிவான தகவல்களை அறிமுக நோக்கில் வழங்குகின்றது.

பதிப்பு விபரம்

நூல்தேட்டம்: தகவல் கையேடு. தம்பிராஜா ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு

(குறிப்பு: உங்களுக்கு தேவையான புத்தகங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்….)

தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்.

Dynasty_Red_Wine
நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
அளவான உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். கேன்சர் நோய் ஏற்படாது என்று கூறப்பட்டது. தினமும் சாப்பிடும் போது மது அருந்தினால், குறிப்பாக ஒயின் குடித்தால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம் என தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள், ஆலில் எண்ணையையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வை லண்டனில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் நடத்தியது. 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

சிரிச்சு பாருங்க… காட்சிக்கு இவைகள்…

1

நம்ம Friend தூங்குறாரு, disturb பண்ணாதீங்க…2

காதல்னா… சும்மா இல்ல… 3

இவதான் என்னோட ’கிளாஸ்’ மேட்டாக்கும்.. 4

இத மட்டும் நான் எடுத்துகிறேனே பிளீஸ்… 5

ஏய் பன்னிகுட்டி.. என்ன தூக்கு பாப்போம்..? 6

என்ன மாநாடாப்பா? 7

போதும்.. எத்தன போஸ் கொடுக்கிறது..? 8

அங்க.. என்ன இருக்கு…??? 9

பாவம் பூனை 10

உட்டேன் ஒன்னூ காலி… 11

யாரு.. எல்லாம் நம்ம பயலுகதான்… 12

காலையில எதுவும் சாப்பிடல.. அதான் லைட்டா… 13

ந்ம்மளயே.. நிக்க வெச்சுடாங்களே 14

ஆண்டவா இன்னிகாச்சும் எனக்கு பிடிச்ச நெத்திலி கருவாடு கிடைகனும்… 15

ஷீ… ஷீ.. ரொம்ப டயர்டு ஆயிட்டேன் அதான்… 16

தெய்வ மச்சான்…. 17

நாங்களும் போஸ் கொடுப்போம் இல்ல…

தமிழ் கன்னி காதல் (காசி ஆனந்தன் )

வண்ணத் தமிழ்க்கன்னி வாய்திறந்து பேசுகிறாள்...
மண்ணிற் பிறந்து மணிக்கவிதை பாடிவரும்
பூங்குயிலே உன்னைப் புகழ்வதற்கு நான் யாரோ?
ஏங்கும் இளவஞ்சி எப்படியோ பேச்சுரைப்பாள்?
காத லுருகிவரும் காலத்தில் வாய்மழலை
பாதிவரும் மீதி பதுங்கிவிடு மென்பார்கள்!
ஆனாலும் பொல்லாத ஆசையினால் நானொருத்தி
ஏனோ புதுவிதமாய் இன்று புலம்புகிறேன்!
திட்டமிட்டுப் பேசத் தெரிந்தவள்போல் பேசுகிறேன்!
கொட்டி முழக்கும் கடல்போலக்கூவுகிறேன்!
வண்ணக் கவிஞன் வலக்கரத்தில் நான்கிடந்து
கண்மயக்கம் கொண்டு கதைபேசுங் காலமிது!
நெஞ்சிற் கவலையில்லை! நீலக் கருவிழிகள்
கொஞ்சும் ஒளிமுகமும் கூராயொரு மூக்கும்
ஏலேலோ போடும் இதழ்ப்படகும் கொஞ்சம்போல்
மேலே விழுந்திருக்கும் மீசைக் கருப்பழகும்
பட்டினியால் சோர்ந்தாலும் பார்க்கப் பிடிக்கின்ற
கட்டழகு மார்பும் கவிஞனிடங் காண்கின்றேன்!
வானத் தளவு வளர்ந்திருக்கு மென் றலைவன்
மானத்தின் தோளில் மலர்க்கொடிபோ லாடுகிறேன்!
பாவை எனக்கென்ன பஞ்சம்? எனினுமொரு
தேவை யுரைப்பேன் தெரியாதா மன்னவனே...?
விண்ணின் கதிர்வெடித்து வீழ்ந்த சிறுகோளம்
தண்ணென்று மாறித் தரைபிறந்த காலத்தில்
முன்னம் பிறந்த முதல்மனிதன் வீட்டினிலே
கன்னி பிறந்தேன்.. பிறந்துவந்த காலமுதல்
நாலு திசையும் எனக்கிருந்த நல்லபுகழ்
காலம் அறியும்! வரலாறு கண்டறியும்!
செப்பேடறியும்! செதுக்கி வைத்த கல்வெட்டில்
எப்படியு மிந்த எழில்மகளின் பேர்விளங்கும்!
தென்னன் மதுரை சிறப்புடைய வஞ்சிநகர்
பொன்னி நதிபாயும் புகார் நகரம் ஈழநகர்
ஆன தமிழ்நாட்டின் அரசிநான் ஆனாலும்
சிந்து வெளிப்பரப்பும் žறிக் கடல்பறித்த
தென்குமரி மண்டலமும் தேடிப் புதைபொருளின்
தன்மை அறிந்தவர்கள் இந்தத் தரை முழுதும்
என்னுடைமை என்றே எடுத்துரைப்பர்! முன்பெல்லாம்
மன்னரணி மாடத்தில் மாபுலவர் கூடத்தில்
சொங்கோ லிருந்த சிறப்புடைய மாளிகையில்
தங்கி யிருந்தேன்! தலைவிதியோ மன்னவரே...
பொத்தென்று வீழ்ந்தேன்...! புகழ் கெட்டுப் போனேனே!
கொண்ட முடியிழந்து கோல வடிவிழந்து
பண்டைச் சுகமிழந்த பாவி எதுசெய்வேன்?
நாலுபேர் பார்த்து நகைப்பதற்கு ஊராரின்
கேலி உரைக்கும் கிளிப்பிள்ளை என்செய்வேன்?
என்னால் வயிற்றுணவு தேடு மெழுத்தாளர்
என்னையே விற்றுப் பிழைக்கும் இழிநிலையில்
ஆரிடம்போய்ச் சொல்லி அழுவேன்? தமிழினத்தில்
வேறிடம் நான் போனாலும் வெட்கமிலாப் பாவிகள்
பிச்சையிடும் மாற்றாரின் பின்னால் அடிசுமந்து
கச்சையிலார் போலக் கடுகளவும் மானமின்றி
நாட்டை அடகுவைத்தும் நாலுநாள் சோற்றுக்கு
காட்டிக் கொடுத்தும் கதை நடத்தும் காலத்தில்
எங்க நான் போவேன்...? எளிய தமிழ்ச் சாதி
நூறுவகைச் சாதி நொடிக்கோர் புதுச்சாதி
வேறாய் உருவாக்கி வெவ்வேறாய் மோதுண்டு
தானே அழிந்து தலைசாயும் இந்நாளில்
எங்குநான் போவேன்? எதிர்கால மொன்றில்லாப்
பெண்ணின் நிலையேனோ பெற்றுவிட்டேன்... நான் பொழியும்
கண்­ர் நதிக்குக் கரையொன்று தேறாதா?
என்றுநான் ஏங்கி யிருக்கையிலே பூமலரும்
குன்றத்தில் வந்தீர்... கொடுத்துவைத்தேன், பொய்யில்லை!
வானமழை பார்க்கும் வயலுழவர் கண்ணெதிரே
போனமழை போலப் புறப்பட்டு வந்துள்ளீர்!
வண்ணக் கரத்தால் வளைக்கின்றீர்... ஏழையின்
எண்ணம் பலிக்காமல் என்செய்யும்? நாளைக்கே
கோல முடிபெறுவேன்.. கொண்ட பழம்பெருமை
மீளப் பெறுவேன்... மிகப் பெரிய மண்பெறுவேன்!
இல்லையா மன்னவரே? என்றாள் தமிழ்க்கன்னி!
முல்லைச் சிரிப்பொன்றை மூடித் திறந்து வைத்தாள்!
நெற்றிப் பிறையின் கீழ் நின்ற புருவத்தைச்
சற்று வளைத்தாள் சரிந்த தலையோடு
காதல் விழியிரண்டில் கைபொருத்திக் கூப்பிட்டாள்!
சேதி தெரிந்து சிறகடித்து நான் போனேன்!
என்கரத்தி லாடும் இவளருகில் இன்னும்நான்
உன்னிப் பறப்பதெனில் உள்ளுணர்வே காரணமாம்!
போதை யுலகம்... புலவனுக்குப் பொன்னுலகம்
வாதை யுலகம் வலம்வந்த வேகத்தில்
கூடல் மகளின் கொதிக்குமுடல் சூட்டினிலும்
வாடும் அவளின் வரலாற்றுச் சூட்டினிலும்
நானொருவன் சூடாகி நல்ல வெறிபடைத்து
தேனமுத மங்கை தமிழ்க்கன்னி என்னுடையாள்
பட்ட துயரம் பறக்க இடிமுழக்கம்
கொட்டி நெடுவான் குலைந்து முகிற்கூட்டம்
ஓசைப் படவும் உலகம் நடுங்குறவும்
ஆசைத் தமிழ்மேல் ஆணை யுரைக்கின்றேன்...

20 இலக்கிய தமிழ் நூல்கள் தொகுப்பு.- இலவச பதிவிறக்கம் – பாகம் 3.

1. திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்)
     திருமூலர்
     சமயம் – சைவம்
     இணைப்பு:
pm0010.pdf

2. திருமுறை 10 /திருமந்திரம்
   திருமூலர்
   சமயம் – சைவம்
   இணைப்பு:
pm0010.pdf

3. தண்ணீர் தேசம்
    வைரமுத்து
    இணைப்பு:
pm0011.pdf

4.தேசிய கீதங்கள்
   சி. சுப்ரமணிய பாரதியார்
   இணைப்பு:
pm0012.pdf

5.பாரதியார் பாடல்கள் – 1
   சி. சுப்ரமணிய பாரதியார்
   இணைப்பு:
pm0012.pdf

6. தேசிக பிரபந்தம்
   வேதாந்த தேசிகர்
   சமயம் – வைணவம்
   இணைப்பு:
pm0013.pdf

7. பகவத் கீதை /தமிழாக்கம், விளக்கவுரை
    சி. சுப்ரமணிய பாரதியார்
    இணைப்பு:
pm0014.pdf

8. நளவெண்பா
   புகழேந்திப் புலவர்
   இணைப்பு:
pm0015.pdf

8. நாலடியார்
   பல ஆசிரியர்கள்
   நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு
   இணைப்பு::
pm0016.pdf

9. திருக்குறள் /ஆங்கில மொழியாக்கம்
   சுத்தானந்த பாரதியார்
   நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு
   இணைப்பு:
pm0017.pdf

10. திருவருட்பா /திருமுறை 1 (பாடல்கள் 1-570)
     இராமலிங்க அடிகள்
     இணைப்பு:
pm0018.pdf

11. திருவருட்பா /திருமுறை 2.1 (பாடல்கள்571-1006 )
      இராமலிங்க அடிகள்
      இணைப்பு:
pm0018.pdf

12. விவிலியம் /புதிய ஏற்பாடு /1
     விவிலியம்
     சமயம் – கிருத்துவம்
    இணைப்பு:
pm0019_01.pdf
                         pm0019_02.pdf

13. விவிலியம் /புதிய ஏற்பாடு /மார்க்கு
     விவிலியம்
     சமயம் – கிருத்துவம்
     இணைப்பு:
pm0019_01.pdf
                         pm0019_02.pdf

14. விவிலியம் /புதிய ஏற்பாடு /மார்க்கு
      விவிலியம்
      சமயம் – கிருத்துவம்
     இணைப்பு:
pm0019_01.pdf
                          pm0019_02.pdf

15. விவிலியம் /புதிய ஏற்பாடு /மாத்தியூ
     விவிலியம்
     சமயம் – கிருத்துவம்
    இணைப்பு:
pm0019_01.pdf
                        pm0019_02.pdf

16. சிறுபஞ்ச மூலம்
     காரியாசான்
     இணைப்பு:
pm0020.pdf

17. நடராசப் பத்து
     முனிசாமி முதலியார், சிருமாவூர்
     இணைப்பு:
pm0020.pdf

18. சுய சரிதை
     சி. சுப்ரமணிய பாரதியார்
     இணைப்பு:
pm0021.pdf

19. ஞானப் பாடல்கள்
     சி. சுப்ரமணிய பாரதியார்
     இணைப்பு:
pm0021.pdf

20. பல்வகைப் பாடல்கள்
      சி. சுப்ரமணிய பாரதியார்
     இணைப்பு:
pm0021.pdf

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்

150px-3753

ஆசிரியர்: கே.ரீ. கணேசலிங்கம்

வகை: வரலாறு

மொழி: தமிழ்

பதிப்பகம்: சேமமடு பதிப்பகம்

பதிப்பு: 2008

பக்கங்கள்: 192

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

ஈழ சிறுகதை, கவிதை தொகுப்பு புத்தகங்கள்.

ezham sirukathai nammai patri kavithai penniya kavithaigal

. ஈழத்துச் சிறுகதை வரலாறு.

· ஆசிரியர் செங்கை ஆழியான்

· வகை: இலக்கிய வரலாறு

· மொழி: தமிழ்

· பதிப்பகம்: வரதர் வெளியீடு

· பதிப்பு: 2001

· பக்கங்கள் xii + 300

நூல் விபரம்

ஈழத்துச் சிறுகதைகள் சரியான வடிவமைப்பில் எழுதத்தொடங்கிய 1930 களின் பிற்பகுதியிலிருந்து 2001ம் ஆண்டு வரை வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த 800 வரையிலான சிறுகதைகளையும் வாசித்து, சுமார் 274 சிறுகதைத் தொகுதிகளையும் 400 சிறுகதைப் படைப்பாளிகளையும் கணிப்பீடு செய்து ஒரு பாரிய நூலை ஈழத்துச் சிறுகதை வரலாற்றுக்குத் தந்திருக்கிறார். சமுதாய சீர்திருத்தக்காலம் (1930-49), முற்போக்குக்காலம் (1950-60), புத்தெழுச்சிக்காலம் (1961-83), தமிழ்த் தேசிய உணர்வுக்காலம் (1983- ) என நான்கு பெரும்பிரிவாக வகுத்து சிறுகதைகளை நூலாசிரியர் மதிப்பீடு செய்துள்ளார். 2001வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளின் பெயர்கள் ஆண்டுவாரியாகப் பட்டியலிட்டு பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது. மூதறிஞர் தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்களின் பவளவிழா நினைவாக வெளிவந்துள்ளது.

பதிப்பு விபரம்

ஈழத்துச் சிறுகதை வரலாறு. செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி).

xii + 300 பக்கம், விலை: ரூபா 300. அளவு: 21 *15 சமீ.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

2. நம்மைப் பற்றிய கவிதை – தொகுப்பு.

ஆசிரியர்:  ஆகர்ஷியா

வகை:  கவிதை

மொழி:  தமிழ்

பதிப்பகம்: காலச்சுவடு

பதிப்பு:  2007

பக்கங்கள்:  72

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

3. என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!

ஆசிரியர்:  பெண்ணியா

வகை:  கவிதை

மொழி:  தமிழ்

பதிப்பகம்:  ஊடறு

பதிப்பு:  2006

பக்கங்கள்:  48

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.